Monday, May 17, 2010

வணக்கமுங்கோ...!!!

அட என்னுடைய மூன்றாவது பதிவுக்கு ஏன் நான்கு மாதத்துக்கும் மேலான விடுப்பு என்று கேட்டால் காரணம் ஒன்றும் பெருசா இல்லை. ஒரு இடத்தில் உட்கார்ந்து டைப் பண்ண நேரம் கிடைக்க வேணும் இல்லையா... மற்ற வேலைகளோடு இதையும் கவனிக்க அனுபவம் போதவில்லை போலும். இருந்தாலும் தொடர்ந்து வாசித்தும் அப்பப்போ கமெண்ட் அடித்தும் வருவதை நிறுத்தவில்லை. இனிமேல் குறைந்தது மாதத்துக்கு இரண்டு முறைஎன்றாலும் பதிவிடுவது என்று தீர்மானித்திருக்கிறேன்.
இந்த நான்கரை  மாத காலத்தில் டைப் பண்ண மிஸ் பண்ணின விஷயங்களை தொகுத்து தரத்தான் இந்தப்பதிவு. முடிந்த வரை சுவாரசியமாக தர முயல்கிறேன்.














திரைப்படங்கள்
தமிழ்ப்படங்களை பொறுத்தவரையில் so far so good என்று சொல்லலாம் ரசிகர்களின் ரசனைத்தரம் கூடியிருக்கிறதோ, படைப்பாளிகளின் கற்பனை வளம் கூடியிருக்கிறதோ தெரியவில்லை  அழகான ரசிக்ககூடிய
படங்கள் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி.
கடந்த வருடம் இறுதியில் வெளியான அருமையான இரண்டு ஹிந்தி படங்களோடு 2010 மலர்ந்திருந்தது. 3 idiots மற்றும் paa தந்த அனுபவம்  வித்தியாசமானதாக  இருந்தது. ஹிந்தி பட உலகின் இரண்டு ஜாம்பவான்கள் அமிதாப்பும் அமீரும்  கொடுத்த ரசனை விருந்தில் முக்கித்திழைத்து மீண்டு வருவதற்குள் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்திருந்தது. பல்வகைபட்ட விமர்சனங்கள் இருந்தாலும் என்னைக்கவர்ந்திருந்தது அந்தப்படம். குறிப்பாக அந்தப்படத்தின் technical சமாச்சாரங்கள் என்னை வியக்க வைத்திருந்தன. அநியாயமாக ஒரு அருமையான வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள் என்று தான் சொல்ல முடியும்.

    என்ன இருந்தாலும் ரீமாவின்  பாத்திரத்தில் வேறு எவரையும் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அந்தப்படியே பார்த்தீபனின் பாத்திரமும். என்ன ஒரு கம்பீரம். கமலுக்கு அடுத்தபடியாக அந்த பாத்திரத்தில் பார்த்தீபன் மாத்திரமே பொருந்துகிறார். ஸ்கிரிப்ட் இல் மெனக்கெட்டிருந்தால் தமிழ் சினிமா வரலாறே கண்டிராத ஒரு அருமையான படைப்பை தந்திருக்கலாம். அங்காங்கே பரமேஸ் மிகவும் வியக்கவைதிருந்தன.  சில இடங்களில் graphics காட்சிகள் நம்பும் படியாக இல்லை என்றாலும் ஒரு worthy effort என்று சொல்லலாம்.

மிகுதி சீக்கிரம்....