முக்கல்களையும் முனகல்களையும் கூட இசையாக்கத்தெரிந்த மைக்கலையும் அவருக்கே உரித்தான நடன பாணியையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விடமுடியாது. அவர் மறைந்து வருகின்ற ஜூன் 25 உடன் ஒரு வருடமாகிறது. அவர் நினைவில் இந்த குட்டிப்பதிவு.
சிறு வயதில் அறியாமல் புரியாமல் கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு சென்றது நன்றாகவே நினைவிருக்கிறது... அர்த்தம் புரியாமல் இசையை ரசிக்கக் கற்றுக்கொண்டது அங்கே என்று தான் நினைக்கிறேன்... சிறு வயது முதல் என் மனதில் அழியாப்பிம்பமாய் நின்று கொண்டவர்கள் பலர்... அதில் மிக முக்கியமான ஒருவர் மறைந்த உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர், மைக்கல் ஜாக்சன்.... மைக்கல் ஜோசப் ஜாக்சன்.
மூன்றிலிருந்து நான்கு தசாப்த்தங்கள் வரை இசை உலகை ஆக்கிரமித்து, மறைந்தும் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை விட்டு மறையவே போகாத இசைச்சக்கரவர்த்தி மைக்கல்... இசை உலகுக்கு அவர் ஒரு மைல் கல். சிறுவயதிலிருந்தே இசையோடு வாழ்ந்திருந்த அவர் ஊடகங்களின் அதீத கவனிப்பால் "தனிப்பட்ட வாழ்க்கை" என்பதே இல்லாமல் முழுமையாய் மக்களால் அவதானிக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அதுவே பின்நாளில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான பலவிதப்பட்ட விமர்சனங்களுக்கு அவரை இட்டுச்சென்றது. எது எப்படி இருந்தாலும் அவரின் இசை மீதான ரசிப்பு/ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்து விடவில்லை. அவரை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அவரின் ரசிகர்கள் தயாராய் இருந்தார்கள்.
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மைக்கல், தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க தெரியாதவராக, குழந்தைத்தனமான(மனதளவில் வளர்ச்சி காணாத) ஒரு மனிதராக இருந்தார். அனால் அதுவே அவரின் இசைக்கு அத்திவாரம் என்பது பலருக்கு புரியாமல் இல்லை. அவரின் fantacy க்கள் இசையாய் வந்தபோது அது அத்தனை லட்சக்கணக்கான ரசிகர்களையும் கட்டிப்போட்டது. வணிக ரீதியாகவும் உலகமே இதுவரை காணாத அளவுக்கு வெற்றியையும், புகழையும் கண்ட பிரபலம் வேறு யாராகவும் இருக்க முடியாது.
இன்று வரை வேறு எவருடைய இசையும் அவர் அளவுக்கு என் வாழ்க்கையோடு பின்னிப்பிணையவில்லை. அவரின் உலக இசை மீதான ஆதிக்கம் குறித்த என்னுடைய விரிவான பார்வை சீக்கிரம் வரும்.... அதற்கு முன் எனக்குப்பிடித்த மைக்கல் ஹிட்ஸ் இதோ கீழே...
Give in to me
http://www.youtube.com/watch?v=kne9JS0eIRc&feature=related
Dirty Diana
http://www.youtube.com/watch?v=bdjqcSCObuc
Liberian Girl
http://www.youtube.com/watch?v=a_JIkRylEzc
Heal the world
http://www.youtube.com/watch?v=0UGTISl1Gts
Earth song
http://www.youtube.com/watch?v=usUWkIHVzo8
Who is it
http://www.youtube.com/watch?v=_hqHdSpv2_E
Bilie Jean
http://www.youtube.com/watch?v=gwl-t44U2Ns
They dont care about us
http://www.youtube.com/watch?v=97nAvTVeR6o
In the closet
http://www.youtube.com/watch?v=cupnsUDyjuA
"Naku penda piya-naku taka Piya-mpenziwe"
RIP MICHEAL JACKSON
Wednesday, June 23, 2010
Friday, June 4, 2010
வாழ்த்துகிறேன்...
சிலரோடு பழகினால் பிடித்துப்போகும்.. சிலரால் பழக்கமே வெறுத்துப்போகும். வெகு சிலர் பழக்கமே இல்லாமல் பல நாள் பழகின உணர்வோடு மனதுள் இருப்பார்கள்....
லோஷன் அண்ணாவை பள்ளிக்காலம் முதல் அறிந்திருகிறேன் .... பழகுவதற்கு பேசிக்கொள்வதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லாமல் அவர் பல வருடங்கள் எனக்கு முன் நான் படித்த அதே கல்லூரியில் குப்பை கொட்டி சென்றதாய் அவருடைய அருமை பெருமைகளை எல்லாம் எங்கள் கல்லூரி மேசைகளும் கதிரைகளும் சொல்லும். நான் சிறு வயது முதல் வியந்து பார்த்து Role Modelகளாய் இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்... இவருடைய குரல் எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் என்னை கவர்ந்தவை. எனக்குப்பிடித்த நிறைய விஷயங்கள் இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதில் ஒரு கூடுதல் மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் அண்ணா...!!! என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என்றும் இன்றுபோல் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்... இறைவனை பிரார்த்திக்கிறேன்....!!!!
என்றென்றும் அன்புடன்
உங்கள்
இரசிகன்/வாசகன்

Subscribe to:
Posts (Atom)