Friday, June 4, 2010

வாழ்த்துகிறேன்...

சிலரோடு பழகினால் பிடித்துப்போகும்.. சிலரால் பழக்கமே வெறுத்துப்போகும். வெகு சிலர் பழக்கமே இல்லாமல் பல நாள் பழகின உணர்வோடு மனதுள் இருப்பார்கள்....


லோஷன் அண்ணாவை பள்ளிக்காலம் முதல் அறிந்திருகிறேன் .... பழகுவதற்கு பேசிக்கொள்வதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லாமல் அவர் பல வருடங்கள் எனக்கு முன் நான் படித்த அதே கல்லூரியில் குப்பை கொட்டி சென்றதாய் அவருடைய அருமை பெருமைகளை எல்லாம் எங்கள் கல்லூரி மேசைகளும் கதிரைகளும் சொல்லும். நான் சிறு வயது முதல் வியந்து பார்த்து Role Modelகளாய் இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்... இவருடைய குரல் எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் என்னை கவர்ந்தவை. எனக்குப்பிடித்த நிறைய விஷயங்கள் இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதில் ஒரு கூடுதல் மகிழ்ச்சி...



வாழ்த்துக்கள் அண்ணா...!!! என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என்றும் இன்றுபோல் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்... இறைவனை பிரார்த்திக்கிறேன்....!!!!
 
 
 
என்றென்றும் அன்புடன்
உங்கள்
இரசிகன்/வாசகன்

1 comment: