இது என் முதல் பதிவு....... நிறைய காலமாய் எழுதவேண்டும் என்றிருந்தேன்.... இன்று நேரமும் கிடைத்தது பேச விஷயமும் கிடைத்தது.
இன்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.... நேரம் பத்து அரை..... நம் வேட்டைக்காரனின் சிறப்புக்காட்சியாம்..... கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.... என்ன ஒரு சிரிப்புக்காட்சி.... வழமையாய் ஏதாவது ஒரு புதுப்படம் வந்தால் நாம் எல்லாரும் காண்கிற காட்சி தான்.... இருப்பது நான்கே பேர் என்றாலும் அடித்துப்பிடித்து டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே செல்வதில் எம்மவருக்குத்தான் என்ன ஒரு திருப்தி.......
விஜய் படங்கள் என்றால் எனக்கு அலர்ஜி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் என்ன அவரின் ஒரு சில காமடிப்படங்களைத்தவிர (சிவகாசி, திர்ப்பாச்சி வகையறாக்கள்), எப்பவாவது வேற வேலை ஏதும் இல்லை என்றால் குறைந்தபட்சம் நித்திரை என்றாலும் கொள்ள முடியாது இருக்கும் போது போக்கிரி,போன்ற சிரிப்பு போலிஸ் படங்களும், இல்லை கட்டாயம் நித்திரை கொள்ள வேண்டும் ஆனால் வரவில்லை என்றால் அவரின் ஏனைய (பெரும்பாலான.... ) படங்களையும் பார்ப்பது உண்டு...... அதனால் தானோ என்னவோ அவரின் படங்களை தவறாமல் (எப்படியும் முயற்சி செய்து கடைசியாக) பார்த்துவிடுவேன்.... இம்முறையும் அப்படித்தான் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.... (தலைவர் படம் எப்படிங்க மிஸ் பண்ண முடியும்..... அதிலயும் இப்ப கொஞ்ச நாளாய் எனக்கு நித்திரை வேற வருது இல்லை... நம்ம டாக்டர்ட்ட போனா ஏதாவது மருந்து தந்து தூங்க வைப்பார் இல்லையா.... அதுக்குத்தான்...)
Dr. Vijay
பெரும்பாலும் இலங்கை வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் நேரம் கிடக்கும் போதெல்லாம் மேய்ந்திருக்கிறேன்..... நானும் பதிவு எழுத வேண்டும் என்று ஆர்வமாய் நாள் பார்த்துக்கொண்டிருந்தேன்......தொண்டனாய் இருந்து தலைவனாய் வருவது தானே முறை.... அதிலும் எத்தனை அனுபவ/புத்தி/லொள்ளு சாலிகள் எல்லாம் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் இந்த பதிவுலகத்தில்... இணைந்து கொள்வதென்றால் என்னிடமும் ஏதாவது சரக்கு இருக்க வேண்டும் இல்லையா..... இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த என்னை அவசரம் அவசரமாய் இந்தப்பதிவை எழுத வைத்தது அந்தக்காட்சி......
வேறென்ன நம்ம தலைவரின் படத்தின் சிறப்புக்காட்சியை பார்க்கிறதுக்குத்தான் இத்தனை அடிபிடியும்.... அந்தக்கூட்டத்தில் எல்லாருமே பெருமதிப்புக்குரிய எங்கள் தமிழ் பேசும் சொந்தங்கள்... அதிலும் முக்கால்வாசிப்பேர் தமிழ் இளைஞர்கள்(விசை ரசிகராம்...). பெண்கள் சிலரும் வந்திருந்தார்கள் (இரண்டரை மணிநேரப்படத்துக்கு நான்கு மணிநேரமாய் காத்திருப்பவர்களும் அடக்கம்... இதில படம் தொடங்க மேலும் ஒருமணித்தியாலமாவது போகுமாம்...). அவர்கள் தாராளமாக எவ்வளவு நேரமும் காத்திருந்து என்னத்தை வேண்டுமானாலும் பார்க்கலாம் அது அவர்களின் தனி மனித சுதந்திரம்.... அவர்களின் விருப்பம்.... அங்கே முகாம்களில் ஒரு கூட்டம் சாப்பாட்டுக்கு அடிபட்டுக்கொண்டு இருக்க இங்க டிக்கட்டுக்கு அடிபடுவது எங்கள் எங்கள் சுதந்திரம் தானே.... எங்களுக்குத்தான் சாப்பாடுக்கு பிரச்சனை இல்லையே ... பிறகு நாங்கள் என்னத்துக்கு தேவையில்லாததை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டும்... வாங்க நாங்க படம் பார்ப்பம்.... 'விசை' படம் பார்ப்பம்.
ஆனால் இங்க படம் பார்க்கிறது பிரச்சனை இல்லை... படமா பார்க்கிறம் என்றது தான் பிரச்சனை..... சரி ஒரு வழியாய் டிக்கட் வாங்கி உள்ளே போனால்.... படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... அதுவல்ல இங்க நான் சொல்ல வருவது.... எங்கட இளைஞர்கள் ஆடும் கூத்து (நிச்சயமாய் சிங்கள இளைஞர்கள் இப்படி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து... ) புல்லரிக்க வைக்கும்... அதையெல்லாம் அவர்களைப்பெற்றவர்கள் ஒருநாளாவது நேரில் பார்க்க வேண்டும்... அன்று இரவே அவர்கள் தூக்கு போட்டு உயிர் விடுவார்கள்.... அவர்கள் பேசும் 'செந்தமிழ்' அவ்வளவு கொள்ளை அழகு..... படம் ஆரம்பிப்பதில் இருந்து அந்த 'செந்தமிழ் வேந்தர்கள்' செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இருக்காது.... தங்கள் தலைவனின் படத்தை அவர்களும் பார்ப்பதில்லை மற்றவர்களையும் பார்க்க விடுவதில்லை....அதில் என்ன சந்தோசம் இருக்குமோ தெரியவில்லை... அவர்கள் செய்யும் எந்த ஒரு செயலும் 'அவர்கள் சந்தோஷமாய் படம் பார்க்கிறார்கள்' என்று நினைக்க வைப்பதில்லை... முன் இருக்கையில் இருப்பது தான் என் சகோதரி இல்லையே, பின்னிருக்கையில் இருப்பது தான் என் தாய் இல்லையே.... பிறகு அவர்கள் என்ன மன உளைச்சல் பட்டாலும் நான் ஏன் கவலைப்படவேண்டும்.... வாங்க நாங்க படம் பார்ப்பம்....
அங்கே ஒரு கூட்டம் உறவுகளையும், உயிர்களையும் தொலைத்து விட்டு எதிர்காலத்தை குறித்த கனவுகளோடு ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்க, இங்கே ஒருகூட்டம் பத்துக்காசுக்கு பெறுமதியில்லாத விஷயத்துக்காக உயிரை விட்டுக்கொண்டு இருக்கிறது... எங்கே எங்கள் எதிர்காலம்.... எங்கள் நாளைய தலைவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்.... எங்கே போயிற்று எங்கள் இனத்தின் கண்ணியம்... தரமான திரைப்படங்களை நிச்சயமாக வரவேற்க வேண்டும்... அது சினிமா ஆர்வம்... அப்போது அது கலை. ஆனால் இந்த சினிமா மோகம் எங்கிருந்து வந்தது? சினிமா என்ற மாயலோகத்தில் மக்களை முழ்கடித்து தங்கள் சுய இலாபம் பார்க்கும் இந்திய கலாசாரம் எப்படி எங்களுடயதாகும் ? .... தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுகிறவர்களே... தமிழ் கலாசாரம் பற்றிப் பேசுகிறவர்களே... எங்கள் எதிர்கால சமுதாயம் எங்கள் உரிமை இல்லையா ??? அவர்கள் எங்கள் கலாசாரம் இல்லையா???? அவர்களை விழித்தெழ வைப்பது எங்கள் கடமை இல்லையா ?????
பி.கு: எங்கே ஆரம்பித்தேன் எப்படி முடித்தேன்... என்றெல்லாம் தெரியவில்லை.... மனதில் நினைத்ததை அப்படியே பதிவு செய்தேன்.... ஏதேனும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.... உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து எழுதவே விரும்புகிறேன்... மீண்டும் சீக்கிரம் சந்திக்கலாம்.....
அன்புடன்,jega
பதிவுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்....
ReplyDeleteஉங்கள் கருத்தோடு நிறையவே ஒத்துப் போகின்றேன்...
என்னுடைய ஒரே கருத்து இன்று எழுகின்ற இத்தனை கருத்துக்களும் விஜய் படத்திற்கு மட்டும் எழுப்பப்படுவது ஏன்?
நான் விஜய் இரசிகனல்லன். நான் கமல் இரசிகன்.
ஆனால் விஜயை மட்டும் இலக்குவைத்து பலரும் தேசியம், தமிழர் பிரச்சினை கதைப்பது ஏன்?
அடுத்துவரும் எந்திரன் படத்திற்கு இத்தனை கருத்துக்கள் எழுப்பப்படுமா?
அதைத்தவிர இந்த சினிமா மோகத்தின் மேல் எனக்கு துளியும் விருப்பம் கிடையாது.
திரையரங்குகளில் பேசப்படும் செந்தமிழ்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்...
ஆனால் என்ன சொல்ல?
திருந்துவதை கடுமையாக எதிர்க்கும் இனமல்லவா நாங்கள்?
முகாம்களில் முன்புபோல இப்போது உணவுக்குப் பிரச்சினைகள் இல்லையென்று நான் நினைக்கிறேன். அதற்காக அவர்கள் அங்கே இருப்பதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல.
வருகைக்கு நன்றி கனககோபி...... விஜய் படத்தைத்தான் நான் குறை ஏதும் சொல்லவில்லையே..... இதற்காகவாவது பயன்படுதே என்று புகழ்ந்து தள்ளியிருந்தேனே(ஹி ஹி...). வேறென்ன செய்ய.... நாங்களெல்லாம் என்ன விஜய் குடும்பத்தோடு பரம்பரைப்பகையா.... ஏன்இப்படி இருக்கிறார் என்ற தவிப்புத்தான் எனக்கு ..... நானும் படம் பார்க்கத்தானே போறன்... மற்றப்படி தேசியம் குறித்த கருத்தெல்லாம் விஜய்க்கு அல்ல எமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியவை......
ReplyDelete