இலக்கண இலக்கியங்கள் பரிட்சயமில்லா ஒரு பாமரனின் பரிதவிப்பு.... அவன் நேசிக்கும் அழகு தமிழில்.....
****
காற்றோடு கதை பேசும் உன் விழிகளுள் தொலைந்து போனேனடி ஒரு நாள்...
தேடிப்பார்க்க வழியேதும் இல்லாமல் என் நெஞ்சம் ஏங்கித்தவிக்க..
நம் விழிகள் தமக்குள் பார்த்து காதல் வளர்த்து காத்திருக்க....
நீ போகும் வழியெங்கும் என் கால்கள் நடை பயில...
என் நாடித்துடிப்பு உன் இதழோரப் புன்னகைக்காய் தவம் கிடக்க...
காலம் கனியும் மட்டும் காற்றோடு நானும் பேசிக்கொண்டிருப்பேன்.....
காதல் கொண்ட நம் கண்களின் கதையை...
- Jey
****
உறக்கமில்லா என் இரவுகளில் உன் நினைவுகள் சுகமாய் விரிய...
யாரும் இல்லா வான் வெளி வழியே உன் முகம் பார்த்து படுத்தபடி..
கண்சிமிட்டும் அந்த நட்சத்திரங்கள் நீயென்றெண்ணி பேசிச்சிரித்திருக்க...
காத்திருப்பு மட்டுமே எனக்கான வழியாய் காலம் சொன்னது நினைவுக்கு வர...
வலித்ததடி என்னிலை எண்ணி எனையே வெறுத்தேனடி...
என் வார்த்தைகள் மௌனமாய் உனைச்சேரும் நிலை கண்டு...
ஏங்கித்தவித்து, வெம்பி அழுது, சினம் கொண்டு, மீண்டு எழுந்து...
தென்றலென்றிருந்த நீ என் நெஞ்சுள் புயலாய் புகுந்த விதம் எண்ணி....
உன் பார்வை தரும் பரவசத்தில் மூழ்கி பாடல் வடித்து...
என் கனவுகள் என்றோ நிஜம் ஆகும் என்ற கனவில்...
சுகமான உன் நினைவுகளோடு காத்திருக்கிறேன் என் காதலி...
- Jey
****
அனிச்சையாய் என்னுள்ளே வந்தவள் நீ...
என் நெஞ்சில் ஆழப்பதிந்தவள் நீ...
அழகாய் என் உயிராய் என் வாழ்வாய்...
என் எல்லாமாய் போனவளும் நீ...
நானே அறியாமல் எனக்கானவளாய் மாறியதும்,
அது புரியாமல் நீயும் சொல்லத்தெரியாமல் நானும்,
தவிக்க எனை நீ தவிர்த்திருக்க,
அது என்னைப்போட்டு வதைக்க,
மற்றொரு தனிமையான இரவிலே,
முழுநிலவொளி ஜன்னல் வழி,
என் வலியெல்லாம் மறைத்து,
உன் நினைவுகளை மீட்டுக்கொடுக்க,
புன்னைகையோடு விழி மூடுகிறேன்.....
யாரும் இல்லா வீதியோரமாய்,
என் கைபிடித்து நடைபோடும் உன்னை,
கனவிலே காணும் அங்கலாய்ப்பில்....
- Jey
****
No comments:
Post a Comment