நீண்ட நாட்களுக்கு பிறகு கொஞ்சம் எழுத வந்திருப்பதில் சந்தோசம்.... என்ன செய்தாலும் எழுதுவதை பழக்கப்படுத்திக்கொள்ள முடிவதில்லை..... பரபரப்பாய் 2011 சென்றுகொண்டிருக்கிறது... எவண்டி உன்ன பெத்தானில் தொடங்கி ஐக்கியநாடுகள் அமைப்பின் நிபுணர் குழு அறிக்கை, கனடா ராதிகா, பாபாவின் ஒசாமாவின் மரணங்கள் வரை உலக விடுப்புகள் அநேகம்..... சுவாரசியமாய் தான் நாட்கள் நகர்கின்றன....
அடுத்தவரின் தவறுகளில் அநேகம் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்வது மிகச்சரி தான்... தெய்வம் நின்று கொல்வான் என்பது அதைவிட மிகசரியாய் இந்தக்காலகட்டதுக்கு பொருந்துகிறது. புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள் !!!! :P
நல்லவனாக ஒருவன் வாழ்வதனால், மக்களுக்கு அனேக சேவைகள் செய்வதனால், நல் கருத்துக்களை போதிப்பதனால் மாத்திரம் ஒருவரை கடவுளாக கருதிக்கொள்கிற பெருந்தன்மை..... பாமரத்தனத்தின் உச்சம் அன்றி வேறென்ன.... கடவுள் பற்றிய எந்த விவாதமும் சமரசமாய் முடிவுக்கு வருவதில்லை... காரணம் அவரவர் தத்தம் புரிதலோடு கடவுள் சார்ந்த கருத்துக்களை அணுகுவது தான். எதுவுமே சரி பிழை என்று கிடையாது... அவரவர் நம்பிக்கைகேற்ப்ப அவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் சரியாக இருக்கலாம். மற்றவரிடத்தில் அன்போடும் கண்ணியத்தோடும் நேர்மையாய் வாழச்சொல்லித்தருகிற எந்த மார்க்கத்தையும் பின்பற்றலாம்... ஆனால் அதைக்கற்றுத்தருகிற எல்லாரும் கடவுளாகி விடமுடியாது... கடவுள் என்ற ஒரு சக்தி நிச்சயமாய் இருக்கிறது... அதற்காக எல்லாரையும் கடவுளாக்கிப்பார்க்கிற மூடத்தனம் கட்டாயம் கைவிடப்பட வேண்டும்.
ஒசாமா நிச்சயமாய் இறந்திருப்பாரா ?? அல்லது இல்லாத் ஒருவரை மறுபடி கொன்று சரிந்து போயிருக்கிற தம் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப ஓபாமா செய்கிற சூழ்ச்சியா???? சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் உண்மை தெரியும்... எது எப்படி இருந்தாலும் ஒசாமாவை கொன்றதுக்காக மக்கள் அமெரிக்காவை தலையில் தூக்கி வைத்து ஆடப்போவதில்லை.... ஒன்று சொறிநாய் மற்றது வெறிநாய்... இரண்டுமே மக்களுக்கு ஆபத்தானவை தான்.... "சொறி"யின் கதை முடிந்தது... ஆனால் "வெறி"யின் வெறி அடங்கப்போவதேயில்லை....... வெரி சொறி மக்கள்ஸ் ... உங்கள் கதை அவ்வளவு தான்...!!!!
மீண்டும் சந்திக்கும்வரை
என்றென்றும் உங்கள்
ஜே !!!