ஆர்வக்கோளாரில் பதிவெழுத வந்து
எழுதி எழுதி பழகலாம் என்று அரைகுறையாய் எழுதி
பிறகு அவ்வப்போது எழுதி.... இப்போது அதுவும் இல்லாமல்
என்ன கொடும சார் இது...
இதுல மாசத்துக்கு இரண்டு பதிவு என்று சவால் வேற....
ம்ம்ம்ம்.....
"நான் நானாக இல்லை தாயே..." என்ன பண்றது சார் என் வேலை அப்படி...
வெட்டியா இருக்கிறது எண்டா லேசுபட்ட வேல எண்டு நினைசீங்களா...
well... உண்மையிலேயே கொஞ்சம் வேலை தான்... இருந்தாலும் பதிவுகள வாசிக்கிறத நிப்பாட்டேல.... கடந்த வாரங்களில் நிறைய சுவாரசியமான அனுபவங்கள்... நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்....
அண்மையில் the social network பார்த்ததிலிருந்து Mr. Mark உம் விக்கி லீக்ஸ் தலை Julian Assange உம் நிறையவே என்னை கவர்ந்திருந்தார்கள். அவர்களை பற்றி இன்னும் கொஞ்சம் படித்துக்கொண்டு ஒரு பதிவெழுதலாம் என்றிருக்கிறேன். அண்மையில் நடந்த பதிவர் சந்திப்பை நிறையவே மிஸ் பண்ணுவதாய் ஒரு பீலிங்.... கட்டாயம் வந்திருக்க வேணும். well thats it for tonight..!!!
வெகுசீக்கிரம் ஒரு முழுமையான பதிவில் சந்திக்கலாம் (என்ற நம்பிக்கையுடன்)
உங்கள்
ஜெகா.
(எல்லா மாதிரியும் எழுதிப்பார்த்து பழக நினைத்த படியால் ஒரே அலங்கோலமாய் எழுதி இருக்கிறன் what to do... சீக்கிரம் என் பாணியை கண்டுபிடிப்பேன்)
Friday, December 10, 2010
Tuesday, October 12, 2010
"அவன் நேசிக்கும்...."
இலக்கண இலக்கியங்கள் பரிட்சயமில்லா ஒரு பாமரனின் பரிதவிப்பு.... அவன் நேசிக்கும் அழகு தமிழில்.....
****
காற்றோடு கதை பேசும் உன் விழிகளுள் தொலைந்து போனேனடி ஒரு நாள்...
தேடிப்பார்க்க வழியேதும் இல்லாமல் என் நெஞ்சம் ஏங்கித்தவிக்க..
நம் விழிகள் தமக்குள் பார்த்து காதல் வளர்த்து காத்திருக்க....
நீ போகும் வழியெங்கும் என் கால்கள் நடை பயில...
என் நாடித்துடிப்பு உன் இதழோரப் புன்னகைக்காய் தவம் கிடக்க...
காலம் கனியும் மட்டும் காற்றோடு நானும் பேசிக்கொண்டிருப்பேன்.....
காதல் கொண்ட நம் கண்களின் கதையை...
- Jey
****
உறக்கமில்லா என் இரவுகளில் உன் நினைவுகள் சுகமாய் விரிய...
யாரும் இல்லா வான் வெளி வழியே உன் முகம் பார்த்து படுத்தபடி..
கண்சிமிட்டும் அந்த நட்சத்திரங்கள் நீயென்றெண்ணி பேசிச்சிரித்திருக்க...
காத்திருப்பு மட்டுமே எனக்கான வழியாய் காலம் சொன்னது நினைவுக்கு வர...
வலித்ததடி என்னிலை எண்ணி எனையே வெறுத்தேனடி...
என் வார்த்தைகள் மௌனமாய் உனைச்சேரும் நிலை கண்டு...
ஏங்கித்தவித்து, வெம்பி அழுது, சினம் கொண்டு, மீண்டு எழுந்து...
தென்றலென்றிருந்த நீ என் நெஞ்சுள் புயலாய் புகுந்த விதம் எண்ணி....
உன் பார்வை தரும் பரவசத்தில் மூழ்கி பாடல் வடித்து...
என் கனவுகள் என்றோ நிஜம் ஆகும் என்ற கனவில்...
சுகமான உன் நினைவுகளோடு காத்திருக்கிறேன் என் காதலி...
- Jey
****
அனிச்சையாய் என்னுள்ளே வந்தவள் நீ...
என் நெஞ்சில் ஆழப்பதிந்தவள் நீ...
அழகாய் என் உயிராய் என் வாழ்வாய்...
என் எல்லாமாய் போனவளும் நீ...
நானே அறியாமல் எனக்கானவளாய் மாறியதும்,
அது புரியாமல் நீயும் சொல்லத்தெரியாமல் நானும்,
தவிக்க எனை நீ தவிர்த்திருக்க,
அது என்னைப்போட்டு வதைக்க,
மற்றொரு தனிமையான இரவிலே,
முழுநிலவொளி ஜன்னல் வழி,
என் வலியெல்லாம் மறைத்து,
உன் நினைவுகளை மீட்டுக்கொடுக்க,
புன்னைகையோடு விழி மூடுகிறேன்.....
யாரும் இல்லா வீதியோரமாய்,
என் கைபிடித்து நடைபோடும் உன்னை,
கனவிலே காணும் அங்கலாய்ப்பில்....

Monday, August 30, 2010
GOD !!!
"We are in the position of a little child entering a huge library filled with books in many languages. The child knows someone must have written those books. It does not know how. It does not understand the languages in which they are written. The child dimly suspects a mysterious order in the arrangement of the books but doesn't know what it is. That, it seems to me, is the attitude of even the most intelligent human being toward God. We see the universe marvelously arranged and obeying certain laws but only dimly understand these laws." - -Albert Einstein
Saturday, August 14, 2010
அவர்களுக்கென்ன தெரியும்...!!!
இந்தவாரம் இரண்டாம் தடவையாக இதே மாதத்தில் யாழ் செல்ல வாய்ப்புக்கிடைத்தது.. யாழ் என்றால் யாழ் நகரம் அல்ல யாழ் செல்லும் வீதியில் ஒரு கிராமம். செல்லும் வழியெங்கும் சகோதர இனத்தவர்கள் உற்சாகமாக தங்கள் விடுமுறையை களித்துக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த புத்த கோவில்களில் வழிபடுகிறார்கள். இராணுவ நினைவுத்தூபிகளின் முன்னால் நின்று தங்கள் அஞ்சலிகளை செலுத்துகிறார்கள், இராணுவ படைப்பிரிவுகள் நடத்தும் உணவகங்களில் பாணும் பருப்பும் சாப்பிடுகிறார்கள் சிலர் கிரிபத் சாப்பிடுகிறார்கள். வேறு சிலர் வெளிகளில் தாமாகவே சமைத்து உண்ணுகிறார்கள். இப்படியாக முன்னெப்போதும் இல்லாத புதிய காட்சிகள்...
குளிர்ச்சியான கிராமத்து வீதிகளில் நடந்து திரிவது ஒரு சுகம் தான். கப்பலேந்தி மாதா கோவில் உற்சவதிலும் கலந்து கொண்டது வித்தியாசமான அனுபவம். சமயங்கள் சம்பிரதாயங்கள் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அங்கு நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் இரசிக்க முடிந்தது. அதிலும் குறிப்பாக நிறைந்து நின்ற இராணுவத்தினர் சிரித்தபடி மக்களை வரவேற்று உபசரித்தமை, எப்போதும் தமிழில் மாத்திரம் உரையாடியமை (அதிலும் அவர்களில் அநேகம் பேர் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருந்தார்கள்), அவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான பயிற்சிகளை காட்டியது.
![]() |
விழுந்து விழுந்து அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். தமிழில் சரளமாக பேசினார்கள், கையசைத்து விடைகொடுத்தார்கள், எல்லாமே மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள் தான் என்றாலும் எதோ ஒன்று உள்ளுக்குள் உறுத்துவது மாத்திரம் புரிந்தது. மக்களோடு அவர்கள் பழக ஆர்வமாயிருப்பது நல்ல விஷயமே என்றாலும் அவர்கள் அணிந்திருக்கும் சீருடை காரணமாக மக்களால் அவர்களோடு இயல்பாக பழக முடியவில்லை என்பது தான் நிஜம். மக்களோடு மக்களாக வாழ அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கபடுகின்றன. அதிகமாகவே சிரிக்கிறார்கள், தாமாகவே வந்து உபசரிக்கிறார்கள் உதவி செய்கிறார்கள். வெகு சீக்கிரம் அந்த இடத்திலிருந்து இராணுவ முகாமை அகற்றப்போவதாக அவர்களே சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகள் சொல்லும் செய்தி நமக்கெல்லாம் தெரிந்த செய்தி தான். அந்த இராணுவ வீரர்களின் சிரிப்பில் எந்த குற்றமும் இல்லை அதுசரி அவர்களுக்கென்ன தெரியும் மேலிடத்தாரின் நிகழ்ச்சிநிரல்கள்.
Wednesday, June 23, 2010
"A mysterious man"
முக்கல்களையும் முனகல்களையும் கூட இசையாக்கத்தெரிந்த மைக்கலையும் அவருக்கே உரித்தான நடன பாணியையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விடமுடியாது. அவர் மறைந்து வருகின்ற ஜூன் 25 உடன் ஒரு வருடமாகிறது. அவர் நினைவில் இந்த குட்டிப்பதிவு.
சிறு வயதில் அறியாமல் புரியாமல் கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு சென்றது நன்றாகவே நினைவிருக்கிறது... அர்த்தம் புரியாமல் இசையை ரசிக்கக் கற்றுக்கொண்டது அங்கே என்று தான் நினைக்கிறேன்... சிறு வயது முதல் என் மனதில் அழியாப்பிம்பமாய் நின்று கொண்டவர்கள் பலர்... அதில் மிக முக்கியமான ஒருவர் மறைந்த உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர், மைக்கல் ஜாக்சன்.... மைக்கல் ஜோசப் ஜாக்சன்.
மூன்றிலிருந்து நான்கு தசாப்த்தங்கள் வரை இசை உலகை ஆக்கிரமித்து, மறைந்தும் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை விட்டு மறையவே போகாத இசைச்சக்கரவர்த்தி மைக்கல்... இசை உலகுக்கு அவர் ஒரு மைல் கல். சிறுவயதிலிருந்தே இசையோடு வாழ்ந்திருந்த அவர் ஊடகங்களின் அதீத கவனிப்பால் "தனிப்பட்ட வாழ்க்கை" என்பதே இல்லாமல் முழுமையாய் மக்களால் அவதானிக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அதுவே பின்நாளில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான பலவிதப்பட்ட விமர்சனங்களுக்கு அவரை இட்டுச்சென்றது. எது எப்படி இருந்தாலும் அவரின் இசை மீதான ரசிப்பு/ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்து விடவில்லை. அவரை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அவரின் ரசிகர்கள் தயாராய் இருந்தார்கள்.
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மைக்கல், தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க தெரியாதவராக, குழந்தைத்தனமான(மனதளவில் வளர்ச்சி காணாத) ஒரு மனிதராக இருந்தார். அனால் அதுவே அவரின் இசைக்கு அத்திவாரம் என்பது பலருக்கு புரியாமல் இல்லை. அவரின் fantacy க்கள் இசையாய் வந்தபோது அது அத்தனை லட்சக்கணக்கான ரசிகர்களையும் கட்டிப்போட்டது. வணிக ரீதியாகவும் உலகமே இதுவரை காணாத அளவுக்கு வெற்றியையும், புகழையும் கண்ட பிரபலம் வேறு யாராகவும் இருக்க முடியாது.
இன்று வரை வேறு எவருடைய இசையும் அவர் அளவுக்கு என் வாழ்க்கையோடு பின்னிப்பிணையவில்லை. அவரின் உலக இசை மீதான ஆதிக்கம் குறித்த என்னுடைய விரிவான பார்வை சீக்கிரம் வரும்.... அதற்கு முன் எனக்குப்பிடித்த மைக்கல் ஹிட்ஸ் இதோ கீழே...
Give in to me
http://www.youtube.com/watch?v=kne9JS0eIRc&feature=related
Dirty Diana
http://www.youtube.com/watch?v=bdjqcSCObuc
Liberian Girl
http://www.youtube.com/watch?v=a_JIkRylEzc
Heal the world
http://www.youtube.com/watch?v=0UGTISl1Gts
Earth song
http://www.youtube.com/watch?v=usUWkIHVzo8
Who is it
http://www.youtube.com/watch?v=_hqHdSpv2_E
Bilie Jean
http://www.youtube.com/watch?v=gwl-t44U2Ns
They dont care about us
http://www.youtube.com/watch?v=97nAvTVeR6o
In the closet
http://www.youtube.com/watch?v=cupnsUDyjuA
"Naku penda piya-naku taka Piya-mpenziwe"
RIP MICHEAL JACKSON

Friday, June 4, 2010
வாழ்த்துகிறேன்...
சிலரோடு பழகினால் பிடித்துப்போகும்.. சிலரால் பழக்கமே வெறுத்துப்போகும். வெகு சிலர் பழக்கமே இல்லாமல் பல நாள் பழகின உணர்வோடு மனதுள் இருப்பார்கள்....
லோஷன் அண்ணாவை பள்ளிக்காலம் முதல் அறிந்திருகிறேன் .... பழகுவதற்கு பேசிக்கொள்வதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லாமல் அவர் பல வருடங்கள் எனக்கு முன் நான் படித்த அதே கல்லூரியில் குப்பை கொட்டி சென்றதாய் அவருடைய அருமை பெருமைகளை எல்லாம் எங்கள் கல்லூரி மேசைகளும் கதிரைகளும் சொல்லும். நான் சிறு வயது முதல் வியந்து பார்த்து Role Modelகளாய் இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்... இவருடைய குரல் எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் என்னை கவர்ந்தவை. எனக்குப்பிடித்த நிறைய விஷயங்கள் இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதில் ஒரு கூடுதல் மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் அண்ணா...!!! என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என்றும் இன்றுபோல் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்... இறைவனை பிரார்த்திக்கிறேன்....!!!!
என்றென்றும் அன்புடன்
உங்கள்
இரசிகன்/வாசகன்

Monday, May 17, 2010
வணக்கமுங்கோ...!!!
அட என்னுடைய மூன்றாவது பதிவுக்கு ஏன் நான்கு மாதத்துக்கும் மேலான விடுப்பு என்று கேட்டால் காரணம் ஒன்றும் பெருசா இல்லை. ஒரு இடத்தில் உட்கார்ந்து டைப் பண்ண நேரம் கிடைக்க வேணும் இல்லையா... மற்ற வேலைகளோடு இதையும் கவனிக்க அனுபவம் போதவில்லை போலும். இருந்தாலும் தொடர்ந்து வாசித்தும் அப்பப்போ கமெண்ட் அடித்தும் வருவதை நிறுத்தவில்லை. இனிமேல் குறைந்தது மாதத்துக்கு இரண்டு முறைஎன்றாலும் பதிவிடுவது என்று தீர்மானித்திருக்கிறேன்.
இந்த நான்கரை மாத காலத்தில் டைப் பண்ண மிஸ் பண்ணின விஷயங்களை தொகுத்து தரத்தான் இந்தப்பதிவு. முடிந்த வரை சுவாரசியமாக தர முயல்கிறேன்.
திரைப்படங்கள்
தமிழ்ப்படங்களை பொறுத்தவரையில் so far so good என்று சொல்லலாம் ரசிகர்களின் ரசனைத்தரம் கூடியிருக்கிறதோ, படைப்பாளிகளின் கற்பனை வளம் கூடியிருக்கிறதோ தெரியவில்லை அழகான ரசிக்ககூடிய
படங்கள் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி.
கடந்த வருடம் இறுதியில் வெளியான அருமையான இரண்டு ஹிந்தி படங்களோடு 2010 மலர்ந்திருந்தது. 3 idiots மற்றும் paa தந்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. ஹிந்தி பட உலகின் இரண்டு ஜாம்பவான்கள் அமிதாப்பும் அமீரும் கொடுத்த ரசனை விருந்தில் முக்கித்திழைத்து மீண்டு வருவதற்குள் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்திருந்தது. பல்வகைபட்ட விமர்சனங்கள் இருந்தாலும் என்னைக்கவர்ந்திருந்தது அந்தப்படம். குறிப்பாக அந்தப்படத்தின் technical சமாச்சாரங்கள் என்னை வியக்க வைத்திருந்தன. அநியாயமாக ஒரு அருமையான வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள் என்று தான் சொல்ல முடியும்.
என்ன இருந்தாலும் ரீமாவின் பாத்திரத்தில் வேறு எவரையும் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அந்தப்படியே பார்த்தீபனின் பாத்திரமும். என்ன ஒரு கம்பீரம். கமலுக்கு அடுத்தபடியாக அந்த பாத்திரத்தில் பார்த்தீபன் மாத்திரமே பொருந்துகிறார். ஸ்கிரிப்ட் இல் மெனக்கெட்டிருந்தால் தமிழ் சினிமா வரலாறே கண்டிராத ஒரு அருமையான படைப்பை தந்திருக்கலாம். அங்காங்கே பரமேஸ் மிகவும் வியக்கவைதிருந்தன. சில இடங்களில் graphics காட்சிகள் நம்பும் படியாக இல்லை என்றாலும் ஒரு worthy effort என்று சொல்லலாம்.
மிகுதி சீக்கிரம்....
Subscribe to:
Posts (Atom)